யாழ்ப்பாணத்தில் புகைப்பட நிறுவனம் நடத்திய உரிமையாளர் அது நட்டமடைந்ததால் நேற்று தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.
கோண்டாவில் வடக்கு பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய புலவர் ரமேஸ்குமார் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்றிரவு அவரது மனைவி இரவு 11 மணியளவில் உணவு கொண்டு சென்றவேளை அவர் அவரது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
உடனடியாக அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்