ஐநாவின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் வெளிவிவகார அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலா அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளது.
தற்போது காணப்படுகின்ற வளங்களைப் பயன்படுத்தி பரஸ்பர ரீதியாகப் பயன்களைப் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை வழங்குவதற்கும் இயலுமை கிட்டும் வகையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் குறிப்பாக பேண்தகு அபிவிருத்திக்கான 2030 ஆம் ஆண்டு நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்குரிய பயிற்சி மற்றும் கற்றல் ஒத்துழைப்புக்கள், இராஜதந்திரிகளுக்கான பயிற்சிகள், அனர்த்த இடர்களைக் குறைத்தல் மற்றும் நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்தல் மற்றும் பூகோளத் தகவல் தொழிநுட்பப் பயன்பாடு தொடர்பான பயிற்றுவித்தல்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது