யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்துவந்த வயோதிபர் ஒருவர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
79 வயதுடைய திருநெல்வேலி கேணியடி பகுதியை சேர்ந்தவரே
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நல்லூர் பிரதேச பொது சுகாதார பரிசோதகர் நேற்று (26) டெங்கு ஒழிப்பு கள விஜயத்தின் போதே முதியவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்,
அதிகாரிகள் முதியவரின் வீட்டுக்குச் சென்றபோது, வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி மீது விழுந்த நிலையில் முதியவர் இறந்து போயுள்ளார்.
உடனடியாக அதிகாரிகள் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.
உடற்கூற்று பரிசோதனையின்போது மாரடைப்பு காரணமாகவே முதியவர் உயிரிழந்ததாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.