ஈஸ்ட்டர் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை வெளிவந்த அறிக்கைகளையும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகியவற்றையும் அடிப்படையாக வைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
உதயகம்மன்பில உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சம்பந்தமாக வெளியிட்டுள்ள தகவல்கள் மற்றும் அறிக்கைகளின் உள்ளடக்கம் சம்பந்தமாக கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈஸ்ட்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனத் டி சில்வா தலைமையிலான அறிக்கை நியாயமானது என சமந்திரன் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு சம்பவம் சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பொன்றும் உள்ளது.
ஆகவே, குறித்த விடயங்கள் அடிப்படையாக வைத்து சட்ட நடவடிக்கையிiனை அரசு தொடரலாமென சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.