இணையம் ஊடாக மக்களின் பணம் கொள்ளையிடப்படும் சம்பவங்கள்; அதிகரித்து வருவதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இணையம் ஊடாக மக்களிடம் பணத்தை கொள்ளையடித்த வெளிநாட்டினரும் நம் நாட்டவர்களும் அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை தவிரவும் சமூக ஊடகங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட நடுத்தர வயது மற்றும் முதியவர்களுடன் போலியான காதல் உறவுகளை உருவாக்கியும் பணமோசடி நடைப்பெற்று வருகின்றது.
அத்துடன் சமூகத்தில் பிரபலமானவர்கள் போல் பாசாங்கு காட்டி பணம் பெறும் செயற்பாடுகளும் இந்த நாட்களில் பதிவாகியுள்ளன.
இது தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.