வெளிநாடொன்றின் ஆதரவுடன் அறுகம் குடாவில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 19 முதல் 24ம் திகதிக்குள் ,இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
சண்டே டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது.
இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் அறுகம் குடாவில் உள்ள அவர்களது வழிபாட்டுதலத்தில் படுகொலை செய்யப்பட்டிருக்க கூடிய பெரும் ஆபத்தை பொலிஸார் தடுத்துள்ளனர்.
அரபு நாடு இந்த தாக்குதலை நடத்துவதற்கு எவ்வளவு நிதி வழங்கியது என விசாரணைகள் இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.