அரசாங்க சேவையை இலகுபடுத்துவதற்கும் வெளிப்படைத்தன்மையை பேணுவதற்கும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்ப பட்டய நிறுவனத்தின் 26வது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்ப தேசிய விருது வழங்கும் விழாவில் பேசும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கான கொள்கையை கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளாhர்
தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவதுடன் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்துள்ளாhர்
இதன்படி யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டு டிஜிட்டல் வலயங்களை உருவாக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
சர்வதேச டிஜிட்டல் நிறுவனங்களுக்கும் நம்நாட்டு தொடர்பு கண்டுபிடிப்பாளர்களுக்கும் இடையே பாலத்தை ற்படுத்துவதும் அவசியமாகும்
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பக் கல்வியை ஊக்குவிப்பது, தொழில் வல்லுனர்களுக்கு தேவையான கொடுப்பனவுகளை வழங்குவது அவசியமானது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளாhர்
டிஜிட்டல் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.