பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக அரசு தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமனம் செய்ய வேண்டுமென ரணிலின் ஆலோசகர் சகால ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்து வரும் போது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
ரணில் அரசாங்கம் ஏனைய நாடுகளுடன் புலனாய்வு தகவல்களை பகிர்ந்துகொள்வதற்கான பொறிமுறையை உருவாக்கியிருப்பதால் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடிகின்றது என தெரிவித்துள்ளார்.
நாட்டின் பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அறிக்கைகளை வெளியிடுவது பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அந்நிய செலாவணி பிரச்சினையை உருவாக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.