அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற தொழிற்சங்க பிரதிநிதிகள் கூட்டத்திலேயே கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நான் ஆட்சிப் பொறுப்பேற்ற ஆரம்ப காலத்தில் சிலருக்குக் கடன் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதை நாட்டுக்கு அறிவித்தேன். சிலர் சம்பளத்தை 20,000; உயர்த்தச் சொன்னார்கள்.
ஆனால் இப்போது உயர்த்திய சம்பளத்தை கொடுக்க மறுக்கின்றார்கள்.
அதாவது அடுத்த ஆண்டுக்குள் அரச வருமானத்தை பன்னிரெண்டு சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்.
திசைகாட்டி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால் ரணில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு ரணில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.