பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் 80 வீதமான வாக்குகளை அளித்தால் இரு பிரதிநிதிகளை கைப்பற்றலாமென இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருமலை மாவட்ட வேட்பாளரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
திருமலையில் (22) மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இருந்தால் 1985ம் ஆண்டு முதல் நில அபகரிப்பு செய்யப்பட்ட் காணிகளை மீளப் பெறலாம் வன அவர் குறிப்பிட்டார்
11,200 ஏக்கர் நிலங்களை திருமலையில் பறிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்
இதனை மீட்க தமிழ் மக்களுக்கான பிரதிநிதிகள் தேவை எனவே தான் அனைவரும் ஒன்றினைந்து ஒரே குடையின் கீழ் செயற்படுவதுடன் ஊடாக திருகோணமலை மாவட்டத்தில் இரு ஆசனங்களை பெறலாம் என குகதாசன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்