பயங்கரவாதத் தாக்குதல் அபாயம் உள்ளதால், தென்னிலங்கையின் சுற்றுலாப் பகுதிகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு அந் நாட்டு தேசிய பாதுகாப்புச் சபை அறிவித்துள்ளது
அறுகம்பை வளைகுடா பகுதி, இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கில் அமைந்துள்ள கடற்கரைகள் தொடர்பான குறித்த எச்சரிக்கையானது, சுற்றுலாப் பகுதிகள், கடற்கரைகளை இலக்காக கொண்ட பயங்கரவாத தாக்குதல் பற்றிய எச்சரிக்கையை இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புச் சபை அவசரமாக விடுத்துள்ளது
இலங்கையில உள்ள இஸ்ரேலியர்களை எச்சரிக்கையாக இருக்குமாறும், பொது இடங்களில் பெரிய கூட்டங்களை நடத்துவதை தவிர்க்குமாறும் இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது