Tuesday, December 24, 2024
Homeசெய்திகள்சிறி டெலோ உதயராசா அடித்தார் ஆப்பு. கலங்கும் வவுனியா கச்சேரி.

சிறி டெலோ உதயராசா அடித்தார் ஆப்பு. கலங்கும் வவுனியா கச்சேரி.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஜனநாயக தேசியக் கூட்டணியின் பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனுவை உடடனடியாக ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கையின் உயர் நீதிமன்றம் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.

வன்னி தேர்தல் மாவட்டத்தைச் சேர்ந்த பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்பு மனு சட்டப்படி சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியினால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருந்தது.

அதனையடுத்து, பரராஜசிங்கம் உதயராசாவினால் கடந்த வாரம் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அனைத்து ஆவணங்களும் முறையாக சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், மாவட்ட தேர்தல் அதிகாரி வேட்பு மனுவை நிராகரித்ததாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டினர்.

மாவட்ட தேர்தல் அதிகாரியின் தீர்மானம் என சட்ட விரோதமானது என்றும் அந்த முடிவை செல்லாது என்று உத்தரவுடக் கோரி மனுதாரர்கள் கோரியிருந்தனர்

இந்த நிலையில், உயர் நீதிமன்றம், பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டமையானது சட்ட விரோதமானது என இன்று தீர்ப்பளித்தது.


மனுதாரரின் வேட்பு மனுவை அங்கீகரிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments