இலங்கை அரசியல்வாதிகள் தங்கள் நலன்களிற்காக அனுகூலங்களை எதிர்பார்த்தார்கள் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
இலங்கையில் நல்ல வர்த்தக சூழல் இல்லை எனவும் இலங்கை நிறுவனங்கள் விதிமுறைகளை பின்பற்றுவதில்லையெனவும் இலஞ்ச ஊழல் அற்றதாக காணப்படவில்லையென அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
ஜப்பான் நிறுவனங்கள் இலஞ்சம் பெறுவதுமில்லை கொடுப்தும் இல்லையென தெரிவித்த ஜப்பான் தூதுவர் இலஞ்சம் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தால் ஜப்பான் நிறுவனங்கள் அந்த நாட்டிலிருந்து வெளியேறி விடுவது வழமை எனவும் தெரிவித்துள்ளார்.