Tuesday, December 24, 2024
Homeசெய்திகள்ஈஸ்ட்டர் தாக்குதல் விசாரணை அறிக்கை பொய் என்பதை அரசாங்கத்தால் நிரூபிக்க முடியுமா ராஜித்த சவால்

ஈஸ்ட்டர் தாக்குதல் விசாரணை அறிக்கை பொய் என்பதை அரசாங்கத்தால் நிரூபிக்க முடியுமா ராஜித்த சவால்

ஈஸ்ட்டர் தாக்குதல்; விசாரணை அறிக்கையை ஏற்காவிட்டால் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தரவுகள் பிழை என அநுர அரசு உறுதி செய்ய வேண்டும்

ஓய்வுநிலை நீதி அரசர்களைக்கொண்ட குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை அரசியல் நோக்கத்துக்காக தயாரிக்கப்பட்டது என கூறுவதனைவிடுத்து அதனை உறுதிப்படுத்துமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித்த சேனாரத்ன அரசாங்கத்திடம் சவால் விடுத்துள்ளாhர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தி, அதன் சூத்திரதாரிகளை சட்டத்துக்கு முன்னால் நிறுத்துவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது.

அநுரகுமார மீது நம்பிக்கை வைத்து கர்தினால் மல்கம் ரன்ஜித் ஆண்டகையும் அநுரகுமாரவுக்கு ஆதரவளிக்குமாறு தெரிவித்தார்

ஈஸ்ட்டர் தாக்குதல்; தொடர்பில் வெளிவந்திருக்கும் அல்விஸ் தலைமையிலான குழுவின் விசாரணை அறிக்கையில் 17பேருக்கு எதிராக வழக்கு தொடுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

இந்த 17பேரில் ஒருவரே குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் சிரேஷ் பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன ஆகும்

தாக்குதல் தொடர்பில் இந்தியாவின் புலனாய்வு பிரிவு, தெளிவான தகவல் அனுப்பிய போதும் அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்க தவறி உள்ளாhர்

அநுரகுமார திஸாநாயக்க பதவிக்கு வந்ததுடன் பொது மக்கள் பாதுகப்பு அமைச்சின் செயலாளராக அவரையே நியமித்துள்ளார்

அத்துடன் உதய கம்மன்பிலவினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அது அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது எனவும் அமைச்சரவை பேச்சாளர் விஜித்த ஹேரத் தெரிவித்திருக்கிறார்.

குறித்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றால், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தரவுகள் பிழை என்பதை அரசாங்கம் நிரூபிக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித்த சேனாரத்ன அரசாங்கத்திடம் சவால் விடுத்துள்ளாhhர்

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments