அரிசி வியாபாரிகள் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகளுடன் ஜனாதிபதி இன்று கலந்துரையாடினாhர்
ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி விவசாயிகள் அதிக நன்மைகளைப் பெறும் அடிப்படையில் நீண்டகால திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
மக்களின் பிரதான உணவாக பயன்படுத்தப்படும் அரிசியின் விலையை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
நிர்ணய விலை அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்துள்ளதால் அதன் பின்னர் அரிசியின் விலையை மாற்றுவது நியாயமல்ல என அரிசி வியாபாரிகளிடம் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்
அரிசியை கொள்வனவு செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் புதிய பொறிமுறையொன்று அவசியம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளாhர்
அரிசியின் விலை செயற்கையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளாhர்
இக்கலந்துரையாடலில் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி டட்லி சிறிசேன, நிபுன கம்லத், மித்ரபால லங்கேஸ்வர, ஜயசிறி குணதிலக்க, மேனக கம்லத் உள்ளிட்ட வர்த்தகர்கள் மற்றும் விவசாய அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனா