ஈஸ்ட்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் நியமித்த குழுவின் விசாரணைகளின் நம்பகதன்மை குறித்து சந்தேகம் இருப்பதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்
முன்னாள் ஜனாதிபதி ஓய்வுபெற்ற நீதிபதி ஏஎன்ஜே அல்விஸ் தலைமையில் குழு அமைத்ததன் உள்நோக்கம் என்னவென மல்கம் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஷானி அபயசேகரவையும் ரவி செனிவிரத்னவையும் அரசியல் ரீதியில் பழிவாங்குவதற்காகவே இந்த குழு அமைக்கப்பட்டதா என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்