அண்மையில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான பழுதூக்கல் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்று தமிழ் இனத்திற்கு பெருமை சேர்த்த சாதனை வீரன் புசாந்தன்.
;யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த சற்குணராசா புசாந்தனின் இல்லத்துக்கு சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்pனரும்; யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தபால் பெட்டி சின்னத்தில் ஜனநாயக தேசிய கூட்டணியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் இன்று நேரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற இவரது கனவை நனவாக்கியமைக்கு லைக்கா ஞானம் அறக்கட்டளை உதவியமை குறிப்பிடத்தக்கது
அதன்படி பொதுநலவாய போட்டியில், பழுதூக்கும் விளையாட்டில் கலந்து கொண்டிருந்த குணம் புஷாந்தன் மூன்று பிரிவுகளில் பதக்கங்கள் வென்றிருந்தார்.