ஒன்ராறியோவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் யாழ்ப்பாணம் மயிலிட்டியை சேர்ந்த 44 வயதான பஞ்சலிங்கம் பார்த்தீபன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஒன்ராறியோ மாநிலம், மார்க்கம் பகுதியில் வசித்து வந்த நிலையில் அவரது வீட்டு வாசலில் வைத்து நேற்றையதினம் (20-10-2024) அதிகாலை இனம்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.