மக்கள் விரும்பும் அபிவிருத்தியுடன் கூடிய உரிமை அரசியலை முன்னெடுக்க தமிழ் மக்கள் தம்மை வெல்ல வைக்க வேண்டும் என சுயேட்சைக்குழு 7 இன் முதன்மை வேட்பாளரான எமில்காந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
வவுனியாவில் இன்று (22) இடம்பெற்ற இளையோர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்/
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தென்னிலங்கையில் ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து தமிழ் மக்கள் மனங்களிலும், எழுச்சி ஏற்பட்டுள்ளது.
அதை நாம் வரவேற்பதாக தெரிவித்த எமில்காந்தன தமிழ் இளைஞர், யுவதிகள் எதிர்பார்க்கும் மாற்றத்தை தம்மால் வழங்க முடியும் என உறுதியளித்துள்ளார்.
இந்த மாற்றத்தை நோக்கிய வலுவான அணியாக தமது அணி உள்ளதாக எமில்காந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
வன்னி மக்களின் அபிவிருத்தியுடன் கூடிய உரிமை அரசியலை மக்கள் விரும்பும் மாற்றத்துடன் முன்னகர்த்த கோடரி சின்னத்திற்கு வாக்களிக்குமாறு எமில்காந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.