இலங்கையின் பிணைகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் புதிய தலைவராகப் பேராசிரியர் ஹரேந்திர திசாபண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நிதி மற்றும் கூட்டக நிறுவன ஆளுகையின் பேராசிரியரான இவர் 2012 ஆம் ஆண்டில் இலங்கை பிணைகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் பொது பணிப்பாளராகக் கடமையாற்றியுள்ளார்.
மேலும், இவர் 2008 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் நிதி சேவைகள் கழகத்தின் பணிப்பாளராகவும் மூலதன சந்தை கல்வி மற்றும் பயிற்சி பிரிவின் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.