வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமையை உயர்த்தும் வகையில் சீனா 552 மில்லியன் சீன யுவான் நிதியுதவியினை இலங்கை;கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்தானது.
இதன் கீழ் வறிய குடும்பங்களுக்கு 1,888 வீடுகளும் 108 வீடுகள் மூத்த கலைஞர்களுக்கும் வழங்கப்படவுள்ளது
அதற்கான ஒப்பந்தம் நேற்று (22) பத்தரமுல்ல, செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சில் இடம்பெற்றது.
இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வில் நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் கலாநிதி அனுர கருணாதிலக மற்றும் சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கிவு சென்ஹோன்ங் ( ஞi ணூநnhழபெ) ஆகியோர் பங்கேற்றனர்.
வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்றவர்களுக்கான வீடுகள் பேலியகொடை, தெமட்டகொட, மொரட்டுவ, மஹரகம ஆகிய இடங்களில்; நிர்மாணிக்கப்படவுள்ளது
கொட்டாவ பிரதேசத்தில் மூத்த கலைஞர்களுக்கான வீட்டுத் திட்டங்கள் நிர்மாணிக்கப்படவிருக்கின்றன.
நிர்மாணப் பணிகள் இம்மாதம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்களில் நிறைவடையும் என தெரிவிக்கப்படுகின்றது