ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பெண் வேட்பாளர்கள் யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் உறுப்பினர்களுடன் நேற்று; கலந்துரையாடினர்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் போராளியான கருணாநிதி யசோதினி, யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் ஆகியோரே யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் தலைவர் உட்பட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர்.
தேர்தலில் பெண் வேட்பாளரின் முக்கியத்துவம், பெண்கள் அரசியலில் ஈடுபடுவதன் நோக்கம் தொடர்பிலேயே கலந்துரையாடப்பட்டது.
இதில் கட்சி ஆதரவாளர்கள், போராளிகள் நலம்புரிச் சங்க தலைவர் ஈஸ்வரன், முன்னாள் போராளிகள், யாழ்ப்பாண வணிகர் கழக உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.