முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த 16 ஆம் திகதி முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
தமிழ்தேசிய மக்கள் முன்னணி வடகிழக்கில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்களில் மட்டுமே போட்டியிடுகின்றது
இலங்கையில் இரண்டு தேசங்கள் அங்கிகரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்
எங்கள் தேச அந்தஸ்து என்பது தவிர்க்கமுடியாத தேவைப்படுகின்ற ஒரு நிலைப்பாடு இந்த நிலைப்பாட்டினை உறுதிப்படுத்துவதுதான் எங்கள் இலக்காக இருக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் இருக்கக்கூடிய தமிழர்களுக்கு அதிகார பகிர்வு எதுவும் அவசியம் இல்லை அது தமிழ்மக்களின் கோரிக்கையாகவும் இல்லை என்றும் ஜேவிபி யின் ரில்வின் சில்வா சொல்லியுள்ளதனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நினைவுபடுத்தி இது ஆபத்தானது என அச்சம் வெளியிட்டுள்ளார்.
இன்று அநுர குமார திசாநாயக்கவின் செயற்பாட்டினை எடுத்து பார்த்தால் தென்னிலங்கையில் ஊழலினை அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்தாலும் வடகிழக்கில் ஊழல் வாதிகளை அழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப் போறது இல்லையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடகிழக்கில் இருக்கும் ஊழல் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுத்தால் தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்தேதசிய கூட்டமைப்பு, ஈபிடிபி, விக்கேள்வரன் அடங்கலாக அனைவரும் உள்ளே இருப்பார்கள் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளாhர்