தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்டத்திற்கான பிரதான கட்சி அலுவலகம் நேற்று (17) மாலை மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதியில் தமிழரசு கட்சி வேட்பாளரும் சட்டத்தரணியுமான செல்வராஜ் டினேஸனால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது
மன்னார் மாவட்ட தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் கட்சி சார் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் முகமாகவும் குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது
அத்துடன் தமிழரசு கட்சியின் இளைஞர்களுக்கான கூட்டமும் மன்னார் தனியார் விடுதியில் நடைப்பெற்றதுமன்னார் மாவட்டத்தில் பல கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றுகூடலுக்கு வருகை தந்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.
அதேநேரம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மருத்துவருமான சிவமோகன் நிகழ்வில் கலந்து கொண்டு தனது ஆதரவை சட்டத்தரணி செல்வராஜ டினேஸனுக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது