வித்தியானந்த கல்லூரி அதிபரினை இடமாற்றம் செய்யக்கோரி பழையமாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், மற்றும் பெற்றோர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (03) காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதிபர் மீதான குற்றச்சாட்டு
முல்லைத்தீவு – முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி அதிபர் கல்லூரியின் வளர்ச்சியை சீர்குலைக்கின்றார்
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றார்.
83 ஆசிரியர்களாக இருந்த ஆசரியர்களின் எண்ணி;ககையை 63 ஆக குறைத்தார்
பாடசாலையின் ஏனைய ஊழியர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டு பாடசாலையின் அகச்சூழல் சீரின்றியும், பாதுகாப்பின்றியும் உள்ளது.
பாடசாலை சொத்துகளை பாதுகாப்பது மற்றும் அது தொடர்பான வெளிப்படை தன்மை இல்லாது உள்ளது.
குறிப்பாக உயர்தர மாணவர்களுக்கு சில பாடங்களுக்கு பொருத்தமான பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லை.
பல பாட வேளைகளில் வகுப்புகள் நடைபெறுவதில்லை.
இவ்வாறான காரணங்களாளே குறித்த போராட்டம் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
போராட்ட இடத்திற்கு சென்ற அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் குறித்த போராட்டத்திற்கான காரணங்களை கேட்டறிந்திருந்தார்.
அதன்பின்னர் போராட்டத்திற்கான காரணம் தொடர்பான மகஜர் அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும் அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்ததையடுத்து போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது