அண்மையில் நடைபெற்று முடிந்த இலங்கையின் ஜனாதிபதி தேர்தலானது ஜனநாயகத்திற்கான சிறந்த முன்னுதாரணம் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோசி ஹிடேகி புகழாரம் பாடியுள்ளார்
ஜனாதிபதி தேர்தல் அமைதியான சனநாயக ரீதியிலான ஆட்சி மாற்றத்திற்கான நாட்டின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளாhர்
மாற்றத்திற்காக இலங்கை மக்கள் வெளிப்படுத்தியுள்ள அர்ப்பணிப்பு ஊக்கமளிப்பதாக உள்ளதாக்ள ஜப்பான் தூதுவர் மகிழச்சி வெளியிட்டுள்ளார்
இலங்கை மக்கள் சனநாயகத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த அவர் அமைதியான இலங்கையை உருவாக்குவதற்கு அனைத்து மக்களும் ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியதாக மேலும் தெரிவித்துள்ளாhர்
இலங்கையின் புதிய தலைவர்களுடனான அவரது பேச்சுவார்த்தைகள் நம்பிக்கையளித்துள்ளதாக தெரிவித்த ஜப்பான் தூதுவர் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி சர்வதேச ஒத்துழைப்பிற்கான அரசின் அர்ப்பணிப்பை புதிய தலைவர்கள் வலியுறுத்தினார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சிமுறை சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதே புதிய அரசாங்கத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரலாக காணப்படவேண்டும் என ஜப்பானிய தூதுவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்