உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான இமாம் மற்றும் அல்விஸ் விசாரணைக்குழு அறிக்கைகள் மறைத்து வைத்திருப்பது குற்றம் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
எனவே அவற்றை உரிய தரப்பினரிடம் ஒப்படைப்பதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு அரசாங்கம் 3 நாட்கள் கால அவகாசம் கொடுத்துள்ளது
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஓய்வுபெற்ற நீதியரசர்களான இமாம் மற்றும் அல்விஸ் ஆகியோர் சமர்ப்பித்த அறிக்கைகளை புதிய அரசு 7 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்று உதய கம்மன்பில அரசை வலியுறுத்தியிருந்தார்.
இது தொடர்பில் நேற்று (15) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வியெழுப்பிய போது அமைச்சரவை பேச்சாளர் விஜித்த ஹேரத் இவ்வாறு தெரிவித்தார்.