பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனருக்குமிடையிலான சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றள்ளது.
இதில் வறுமை ஒழிப்பு, சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள், வரி சீர்திருத்தங்கள், மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
நாட்டில் கல்வி முறைமையை மறுசீரமைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், மிகவும் பயனுள்ள மற்றும் வினைத்திறனான அரச சேவைக்காக நிர்வாக முறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகள் குறித்தும் விளக்கமளித்தார்