Monday, December 23, 2024
Homeஉள்ளூர்மன்னார் நகரசபைக்கு 3 கோடி வருமானம்

மன்னார் நகரசபைக்கு 3 கோடி வருமானம்

பண்டிகைக் கால வியாபார நிலையங்கள் பகிரங்க குத்தகைக்கு விடப்பட்ட நிலையில் அதன் ஊடாக மன்னார் நகரசபைக்கு 3 கோடியே 20 இலட்சம் ரூபா வருமானம் கிடைக்க பெற்றுள்ளதாக மன்னார் நகர சபை அறிவித்துள்ளது.

மன்னார் நகரசபையின் பண்டிகை கால வியாபார நிலையங்களை ஏல விற்பனை மூலமாக 10 நாட்களுக்கு குத்தகைக்கு விடும் செயல்பாட்டின் ; ஊடாக 300 கடைகள் ஏல விற்பனை மூலம் வழங்கப்பட்ட நிலையில் மன்னார் நகரசபைக்கு 3 கோடியே 20 இலட்சம் ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளது

குறித்த வருமானத்தின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டுக்கான மன்னார் நகர சபையின் வரவு செலவு திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளதுடன் மக்கள் பங்களிப்புடன் வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் அபிவிருத்தி திட்டங்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments