யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
13ஆம் திருத்தச் சட்டத்தின் கீழான மாகாணசபை முறைமை ஊடாக தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்பதற்கு இந்தியா முயற்சிக்கின்றது
ஜனாதிபதி அநுர இந்தியா சென்று இந்திய பிரதமருடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அனைத்து தமிழ் தரப்பினுடைய கோரிக்கையாக இருந்து வருவது சமஸ்டி கோரிக்கையாகும்.
தற்போது இந்தியாவை சந்தித்த ஜனாதிபதி கூட அரசியல் உரிமை தொடரில் எந்த விதமான திட்டவட்டமான உறுதிமொழிகளையும் வழங்கவில்லை.
அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார்.
புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
அரசியலமைப்பு என்பது ‘பழைய மொந்தையிலே புதிய கள்ளு’ போன்று இருக்குமே தவிர எவ்வித தீர்வும் கொண்டதாக இருக்கப்போவதில்லையென சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்