பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு கடன் பெற்றுக்கொடுத்தமைக்காக சீன அரசாங்கத்துக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் சீன மக்கள் குடியரசின் அரசியல் ஆலோசனைக் சம்மேளன தேசியக் குழுவின் உப தலைவர் கின் பொயோங்க்கும் இடையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று (18) சந்திப்பொன்று நடைபெற்றது
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தி, புதிய அரசாங்கத்துடன் தொடர்ந்தும் செயற்பட எதிர்பார்த்திருப்பதாகவும் கின் பொயோங் தெரிவித்தார்.
அதேபோல் நாட்டின் அனர்த்த நிலைமைகளின் போது உதவிகளை வழங்கியமை மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கியமைக்காகவும் நன்றி கூறிய ஜனாதிபதி சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்பை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
சீனா இலங்கையில் மேற்கொண்டிருந்த பல்வேறு வகை வேலைத்திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அவரிடம் கேட்டுக்கொண்டார்
எதிர்வரும் காலங்களில் சீனாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதியை வரவேற்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சீன மக்கள் குடியரசின் அரசியல் ஆலோசனைக் சம்மேளன தேசியக் குழுவின் உப தலைவர் தெரிவித்துள்ளார்