இஸ்ரேலுக்கும் ஹமாஸூக்கும் இடையிலான போர்நிறுத்த பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் பாலஸ்தீன அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி பி.பி.சி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
அதேநேரம் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரும் குறித்த பேச்சுவார்த்தை முன்னோக்கி செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கடந்த வாரங்களில் அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் தங்களது மத்தியஸ்த செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்துள்ளன.
இதையும் படியுங்கள்>குண்டு வெடிப்பில் ரஷ்ய பாதுகாப்புப் படைத் தலைவர் பலி