ரஸ்சியாவின் மாஸ்கோவில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில் ரஷிய பாதுகாப்பு படைத்தலைவர் உயிரிழந்துள்ளார்
தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை உக்ரைன் மீது பயன்படுத்தியதாக அந்நாட்டு நீதித்துறை அதிகாரிகள் கிரில்லோவ் மீது குற்றம்சாட்டினர்
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நேற்று குடியிருப்பு கட்டடம் ஒன்றின் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இதில் ரஷிய இராணுவத்தின் ரசாயன, உயிரியல் மற்றும் கதிர்வீச்சு பாதுகாப்புப் படைகளுக்கு தலைமை தாங்கிய இகோர் கிரில்லோவ் கொல்லப்பட்டார்.
மாஸ்கோவில் உள்ள ரியாசான்ஸ்கி அவென்யூவில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் வாயிலில் எலெக்ட்ரிக் ஷூட்டரில் பொருத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் இகோர் கிரில்லோவ் மற்றும் அவரது உதவியாளர் இருவரும் கொல்லப்பட்டனர் என்று ரஷிய பாதுகாப்பு அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது.
ரஷ்ய டெலிகிராம் சேனல்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்களில், இடிபாடுகளால் சூழ்ந்த கட்டிடத்தின் உடைந்த நுழைவாயில் மற்றும் பனிப் படலத்தின் மீது கிடந்த இரத்தக் கறை படிந்த இரண்டு உடல்கள் கிடக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை உக்ரைன் மீது பயன்படுத்தியதாக அந்நாட்டு நீதித்துறை அதிகாரிகள் கிரில்லோவ் மீது சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது இந்த கொலை அரங்கேறி உள்ளது.
இகோர் கிரில்லோவ் கொல்லப்பட்டதற்கு உக்ரைன் தான் காரணம் என்று கீவ் உளவுத்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் வந்துள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் பாதுகாப்பு அமைப்பான SBU இந்த கொலைக்கு பின்னால் இருப்பதாக அந்த தகவல் கூறுகிறது.
ஜெனரல் ஒரு போர்க் குற்றவாளி என்றும் எனவே அவர் தான் இலக்கு என்றும் உக்ரைன் கருதுவதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்>30 வருடங்களுக்குப் பின் நகரத் தொடங்கிய உலகின் மிகப்பெரிய பனிப்பாறை!