தமிழர்களினால், வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் பொங்கல் திருநாள் முதன்மையானது.
அறுவடை திருநாளாக பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
நமது மண்ணின், பாரம்பரியத்தை பறைசாற்றும் பண்டிகைகளில் பொங்கல் விழா என்றுமே முதன்மையாக உள்ளது.
சூரியன் உட்பட நம்மை வாழ வைக்கும், இயற்கைக்கு நன்றி சொல்லவும், வேளாண்மை தொழிலை பெருமைப்படுத்தவும், இயற்கையின் இன்றியமையாமை என்றும் பாதுகாக்கப்பட வேண்டும் உட்பட பல்வேறு சிறப்பம்சங்களோடு, பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் அறுவடை திருநாள் சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில் நாமும் பதிவு செய்திகள் இணையத்தளம் சார்பாக எமது இணையத்தள வாசகர்களுக்கு தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.