Monday, December 23, 2024
Homeஈழத்து சினிமாதம்பி மதிசுதாவின் மற்றொரு சாதனை. அவரின் முகநூலில் இருந்து

தம்பி மதிசுதாவின் மற்றொரு சாதனை. அவரின் முகநூலில் இருந்து

Our film “Dark days of heaven” /’வெந்து தணிந்தது காடு’ got the special mention award in “Chennai world film festival”
எனது இயக்கத்தில் அமைந்த இத்திரைப்படம் சர்வதேச அளவில் பெறும் 33 வது விருது இதுவாகும்.
மிக மிக குறைந்த பட்ஜெட் இல் ஒரு கைப் பேசியால் எடுக்கப்பட்டு எம் மக்களின் போரியல் வாழ்வு அனுபவத்தை சர்வதேச மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்ததில் எனக்குத் துணை நின்ற அனைவருக்கும் நன்றிகள். இதில் பணியாற்றியவர் மட்டுமல்ல பணமிட்ட 205 பேருக்கும் மீண்டும் நன்றிகள்.
சாதாரண மக்களின் பங்கர் வாழ்வை மையப்படுத்தி சர்வதேச அளவில் அளவில் வெளியான முதலாவது திரைப்படம் இது என்பதை மீண்டும் இன்று வலியுறுத்திக் கொண்டார்கள்.
ஈரானில் இருந்து கலந்து கொண்ட பெண் இயக்குநரான ‘அசியே’ அவர்கள் கொடுத்த கருத்து என்றும் மறக்க முடியாதவை, மும்பையில் இருந்து கலந்து கொண்ட திரை உருவாக்குனர்கள் படத்தில் உள்ளார்ந்த விடயம் தொடர்பாக நீண்ட நேரம் என்னிடம் கேட்டு அறிந்து கொண்டார்கள்.
தாயகத்தில் நடந்த கதைகளை கேட்டு கண் கலங்கினார்கள்.
நான் திரைத்துறையில் இருந்ததற்கு இவை அனைத்துமே எனக்கு வாழ் நாள் முழுக்க திருப்தியைத் தரக் கூடியவையாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments