Tuesday, December 24, 2024
Homeசெய்திகள்நீண்ட காலமாக யாழ் பொலிஸாருக்கு ஆட்டம் காட்டியவர் கைது

நீண்ட காலமாக யாழ் பொலிஸாருக்கு ஆட்டம் காட்டியவர் கைது

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் 300 பவுண் நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் நீண்ட காலமாக தேடப்பட்ட பிரதான சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இன்போது பெருமளவு நகைகள், ஆவணங்கள், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், கைக்குண்டு என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் பகுதி பொலிஸ் பிரிவுகளில் கடந்த 2 வருடங்களாக துவிச்சக்கரவண்டியில் முகத்தை மறைத்து சென்று நூதனமாக நகைகளை திருடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றது.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் நீண்ட காலமாக தேடப்பட்ட புங்குடுதீவைச் சேர்ந்த பிரதான சந்தேக நபர் கொழும்பில் தலைமறைவாக இருந்த போது இந்திக்க தலைமையிலான யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டார்.

இதன்போது சந்தேக நபரின் மனைவி அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 90 பவுண் நகைகள் மீட்கப்பட்டதுடன், திருடிய நகைகளை விற்ற பணத்தில் சந்தேக நபர் கொழும்பில் சொகுசு வீடொன்றை அமைத்தமையும் பொலிஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட நகைகளை வாங்கிய கொழும்பைச் சேர்ந்த மூன்று பேரும் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
பிரதான சந்தேக நபருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments