தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள், ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச முகவர் அமைப்பு மற்றும் அமெரிக்காவின் திறைசேரி துறை ஆகியவற்றின் அமெரிக்க பிரதிநிதிகள் இன்று (07) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்ததாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இச்சந்திப்பில் இலங்கையின் நிர்வாகம், விவசாயம், பொருளாதார வளர்ச்சி மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கான அமெரிக்க ஆதரவை அமெரிக்க பிரதிநிதிகள் மீண்டும் உறுதிப்படுத்தினர் என்றும் இதன் மூலம் சிவில் சமூகம் மற்றும் தனியார் துறையை ஈடுபடுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியதாகவும் ஜூலி சங் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.