Wednesday, January 15, 2025
Homeசெய்திகள்உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடக்கும் ஆனால் நடக்காது

உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடக்கும் ஆனால் நடக்காது

உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், அது பிற்போடப்பட்டதாக அதன் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க குறிப்பிட்டார்.

2023ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிய வேட்புமனுக்களை கோருவதற்கான வரைவுச் சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அண்மையில் அமைச்சரவையின் அங்கீகாரமும் பெறப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தலை விரைவில் நடத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,711 வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பிற்கு விண்ணப்பத்த, 80,670 வேட்பாளர்களில் 8,000 பேர் உயிரிழந்துள்ளனர்

சுமார 2,000 பேர் கட்சி மாறியுள்ளனர். இந்நிலையில் தேர்தலை எவ்வாறு நடத்துவது என தேர்தல்கள் ஆணையம் சிந்தித்து வருகின்றது

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

What do you like about this page?

0 / 400