வடகிழக்கில் உயிர்த்த உறவுகளை தமிழ் மக்கள் நினைவேந்தியமையால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்விதமான அச்சுறுத்தல்களும் இல்லையென பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தினை முன்னிலைப்படுத்தியவர்களும் இனவாத அடிப்படையில் செயற்பட்டவர்களையும் அடையாளம் கண்டு உரிய சட்டங்களின் அடிப்படையில் கைதுகள் முன்னெடுக்கப்படுகின்றன என அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் போரின்போதும், அசாதரண சூழல்களின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூர முடியும்.
அதற்கு தடைகளை ஏற்படுத்தப்போவதில்லை என்பதை முற்கூட்டியே அறிவித்திருந்தோம்.
அந்த வகையில் வடக்கு, கிழக்கு மக்கள் அமைதியான முறையில் தமது அன்புக்குரியவர்களை நினைவேந்தினார்கள்.
இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எந்தவிதமான ஆபத்தோ அல்லது அச்சுறுதலோ இல்லையென பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த மேலும் தெரிவித்துள்ளார்.