கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் புதன்கிழமை (04) கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்
இலங்கை, இந்திய மீனவர்கள் தொடர்பிலேயே பேச்சுவார்த்தை அமையவுள்ளதாக கடற்தொழில் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன
அத்துமீறும் இந்திய மீனவர்கள் சம்பந்தமாக நெகிழ்ச்சித்தன்மையைக் காண்பிக்க முடியாது என கடற்தொழில் அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அத்துமீறும் இந்திய மீனவர்களை கைது செய்யுமாறும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்துகின்றபோது அவற்றைக் கைப்பற்றுமாறும் கடற்படைக்கு கடுமையான உத்தரவினைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது