அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்காலிகமாக பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் நேற்று (30) கேட்டறிந்துக்கொண்டார்
யாழ்ப்பாணத்தின் கல்லுண்டாய் பிரதேச வெள்ள நிலமைகளை ஆய்வு செய்து கல்லுண்டாய் தேசிய இளைஞர் சேவைகள் மன்றக் கட்டடத்தில் தங்கியுள்ள மக்களுடன் கலந்துரையாடினார்
அதன் போது உடனடியாக தீர்க்க கூடிய பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் வழங்கினார்.
இதன் போது அனர்த்தத்திற்கு அப்பால் பொது மக்களால் முன்வைக்கப்பட்ட காணிப் பிரச்சனைக்கு, தீர்வு காண்பதாய் உறுதியளித்துள்ளார்