திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நேற்று வரை (28) 3,372 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது
15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் அழிவடைந்துள்ள அதேவேளை ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை தொடர்பில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
திருமலையில் 14 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 254 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு சமைத்த உணவு வழங்கி வருவதாக தெரிவித்துள்ளாhர்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பிரதேச செயலக ஊழியர்கள், முப்படையினர், சுகாதாரப் பிரிவினர் மற்றும் சமய சமூக அமைப்புக்கள் என அனைவரும் 24 மணித்தியாலங்களும் தயார் நிலையில் உள்ளனர் என அரச அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.