Tuesday, December 24, 2024
Homeஉள்ளூர்தண்ணியில் தடுமாறும் யாழ்ப்பாணம்

தண்ணியில் தடுமாறும் யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நேற்று அவசர சந்திப்பு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் ; கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் ஏ. வி. எம். சம்பத் துய்யகொந்த ‘ அனர்த்ததினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மருந்துகள் இடையூறு இன்றி சீராக விநியோகிக்க திறைசேரி விசேட ஒதுக்கீடுகளை காலதாமதமின்றி ஒதுக்க ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இயற்கை அனர்த்தத்தால் அதிகளவு பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நேரடியாகச் சென்று தீர்வுகள் வழங்குமாறு என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ‘பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தனியார் அமைப்புகள் தொண்டு நிறுவனங்கள், வர்த்தகர்கள் வழங்கி வரும் உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாதுகாப்பு நிலையங்களில் இல்லாமல் வீடுகளில் இருப்போருக்கும் உதவிகள் வழங்க ஒன்றிணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இக் கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கருத்து தெரிவிக்கையில்

வெள்ள அனர்த்தம் ஏற்பட்டதற்கு சட்டத்திற்கு மாறாக கட்டப்பட்ட கட்டடங்களும் காரணம் எனவும், அவற்றை அகற்ற நடவடிக்கைகளை மாநகர சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments