கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் குடியேறும் புதியவர்களை பாதுகாக்கும் வகையிலான சட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.
கனடாவிற்குள் புதிதாக வருவோர் ஏமாற்றப்படுவதனையும் மோசடிகளில் இருந்து தப்புவதற்கும் சிக்குவதனை தவிர்க்கவும்; இந்த புதிய சட்டம் வழிவகுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது
இது தொடர்பில் ஒன்றாரியோ அரசாங்கம் அண்மையில் அறிவிப்பொன்றை வெளியிட்டு இருந்தது.
குடிவரவு பிரதிநிதிகள் என்ற பெயரில் புதிதாக நாட்டுக்குள் வருகின்றவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடாவின் குடிவரவு முறமையின் உதவிகளை பெற்றுக் கொள்வதற்கு புதியவர்கள், பல்வேறு நபர்களின் உதவியை பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றார்கள்
இவ்வாறு உதவி வழங்குபவர்கள் சில நேரங்களில் புதியவர்களை ஏமாற்றுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குடியேறுவதற்கும் தொழில்களை பெற்றுக் கொள்வதற்கும் என போலி ஆவணங்களை விநியோகித்து புதியவர்கள் ஏமாற்றப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்
எனவே இவ்வாறான மோசடிகளில் இருந்து புதியவர்களை பாதுகாக்கும் நோக்கில் ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்ய உள்ளது.