சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான மூன்றாவது மீளாய்வுக்கான ஒப்பந்தம் எதிர்வரும் 23ஆம் திகதி கைச்சாத்திடப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.