Tuesday, December 24, 2024
Homeஉள்ளூர்தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்

தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்

 

தமழ மக்களின் உரிமைக்காய் போராடி உயிர்நீத்து ஆகுதியாகிய வீரமறவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகின்றது.

இந்த மாவீரர் வாரத்தின் இறுதி நாளான நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியான லெப்.கேணல் சங்கர் முதல் வித்தாக வீரசாவடைந்தார்
மாவீரர் நாள்

அந்த நாளையே மாவீரர் நாளாக 1989 ஆம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனால் பிரகடனப்படுத்தப்பட்டது

அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
வணக்க நிகழ்வுகள்

இந்த ஆண்டிற்கான இறுதி மாவீரர் நிகழ்வுகள் நவம்பர் 27 ஆம் திகதி நடைபெறும்.
அந்நாளில் தமிழ் மண்ணுக்காய் வீரச்சாவடைந்த மாவீரர் தொய்வங்களுக்கு அகவணக்கம் செலுத்தி ஈகைச்சுடர் ஏற்றப்படும்.

பொதுவாக, தாயகத்தில் மாவீரர் வாரம் முழுவதும் மஞ்சள் சிவப்பு நிறக் கொடிகள் பறக்கவிட்டு, மாவீரர்களுக்கான பாடல்கள் ஒலிக்கவிட்டு துயிலும் இல்லங்களில் வணக்க நிகழ்வுகள் நடத்தப்படுவது வழக்கம்.

அதேபோல், புலம்பெயர் தேசங்களிலும் இவ்வகையான வணக்க நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments