நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (21) காலை பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் அரசின் கொள்கை பிரகடனத்தை சபையில் சமர்ப்பிக்க தொடங்கினார்
இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பமானது.
சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் நியமனங்கள் உள்ளிட்ட முதற்கட்ட சம்பிரதாயங்களை அடுத்து நாடாளுமன்றம் முற்பகல் 11.30 மணி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
அதன் பின்னர், ஜனாதிபதியின் வருகையுடன் மீண்டும் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகியுள்ளன.