யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் வந்த சீனத் தூதுவர் பல்வேறு தரப்பினரோடு உரையாடியதுடன் ஊடகவியலாளர் மாநாட்டையும் நடத்திச் சென்றார்
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் கியு சென்ஹொங் இற்கும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தினரை சந்தித்து கலந்துரையாடினார்
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும், மேலும் பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பிலும், இதன்போது கலந்துரையாடப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமாங்கராஜா தலைமையில் தூதுவரை சந்தித்த குழுவினர் மாவட்டத்தின் முக்கிய உற்பத்தித் துறைகளான மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுற்றுலாத்துறை, உள்ளிட்ட அனைத்து துறைசார் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பிலான திட்டங்களையும் சீனத் தூதுவரிடம் முன்வைத்துள்ளனர்.
இதேவேளை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு சீனாவில் ஊடகத்துறைசார்ந்து புதிய தொழில் நுட்ப பயிற்சியைப் பெற்றுக் கொடுக்குமாறு சிவில் சமூகத்தினர் தூதுவரிடம் விடுத்த வேண்டுகோள் விடுத்தனர்.
அதற்கு பதிலளித்த தூதுவர் இது மிகவும் வரவேற்கத்தக்க விடையம் இதனை தான் முன்னின்று செய்த தருவதாக உறுதிகளித்துள்ளார்.