முன்னாள் அமைச்சர்களான ரமேஷ் பத்திரன, ரொஷான் ரணசிங்க, பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இன்று (21) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முன்னிலையாகியுள்ளனர்
தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் அங்கீகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே இவர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நாளை (22) குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சபையில் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்தின் அங்கீகாரம் தொடர்பில் அப்போது அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான 18 அமைச்சர்களிடம் வாக்குமூலம் பெறுவதாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் குற்றப் புலனாயவு திணைக்களம் அறிவித்திருந்தது
மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாகக் கூறி, முன்னாள் சுகாதார அமைச்சர் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் திகதி இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் 182 வகையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை பொய்யக முன்வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது
அமைச்சரவைப் பத்திரத்தின் உள்ளடக்கம் தொடர்பில் கண்டறியாது எவ்வாறு அங்கீகாரம் வழங்கியது என்பதற்கான வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என அரசாங்கத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்
இதன்படி, 18 அமைச்சர்களும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்படுகின்றர் என்பது குறிப்பிடத்தக்கது