தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது கடந்த 11ஆம் திகதி பதுளையில் பொலிஸாருடன் இடம்பெற்ற முரண்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை பதுளை பொலிஸ் நிலையம் சென்ற போது பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்
அண்மையில் ஹரின் பெர்னாண்டோ மற்றும் அவரது ஆதரவாளர்கள் பதுளை நகரில் ’10’ஆம் இலக்கம் கொண்ட சட்டைகளை அணிந்து கொண்டு நடமாடியதால் பொலிஸாருடன் முறுகல்நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது